யாழ் இளைஞா்கள் மாட்டுடன் மோதி பின் பேருந்துடன் மோதி கோர விபத்து..!இளைஞன் பலி.

புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிாிழந் துள்ளதுடன், மற்றொரு இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த விபத்து சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர்.

இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் உயிரிழந்துள்ளதுடன்,

அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் உயிரிழந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.