மாணிக்க கங்கையில் நிர்வாண குளியல். 6 பேர் காயம்.

மாணிக்க கங்கையில் நிர்வாணமாக குளித்து கொண்டிருந்தவர்களால் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த பக்தர்களே இவ்வாறு நிர்வாணமாக குளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.