வேலைவாய்ப்பு பேஸ்புக் பக்கங்களினால் ஏமாற்றப்படும் மக்கள்.

அரசாங்க வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடத்தி செல்லப்படும் பேஸ்புக் பக்கங்களில் பலர் ஏமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொழில் பெற்றுக் கொள்வதற்காக தங்கள் சேவை பெற்றுக் கொள்ளுமாறு அதன் முதல் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பேஸ்புக் பக்கத்தில் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கையின் துறைமுக ஆணையம், தேசிய சேமிப்பு வங்கி உட்பட அரசாங்க நிறுவனங்களில் பதவி வெற்றிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான பதவிகள் அதிகாரிகளினாலேயே வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான போலியான நபர்களிடம் உதவிகள் கோரி ஏமாற்றம் அடைய வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.