யாழ் பேருந்து நிலையத்தில் இளசுகளின் காதல் லீலைகள்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கலாசார சீரழிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு நிரந்தரமாக பொலிஸ் காவலரண் வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளம் வயதுடையவர்கள் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை காதல் நிலையமாக பயன்படுத்தும் நிலையில் எமது சமூக கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற இளைஞர் யுவதிகள் யாழ் பேருந்து நிலையத்திலேயே அதிக நேரத்தை கழிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எமது இளம் சமூகம் தவறான பாதையில் செல்வதை தடுக்க அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களால் வலியுறுத்தப்பட்டது.