டியூஷன் டீச்சர் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் வேலையை காட்டிய கணவன்.

டியூஷன் டீச்சர் விஜயலட்சுமி வீட்டில் இல்லாத நேரம் பார்த்துதான், கணவர் தன் வேலையை காட்டி உள்ளார்.. படிக்க வந்த 6 சிறுமியை சீரழித்துள்ளார்... நிலைகுலைந்து அழுதபடி நின்ற அந்த குழந்தையிடம் "நடந்ததை வெளியில் சொல்லாதே" என்று சத்தியமும் வாங்கினாராம் விஜயலட்சுமி!

ஆசிரியர்களை நம்பி டியூஷனுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் சஞ்சனா டீச்சர் சிக்கினார்.. தன்னிடம் படிக்கும் மாணவிகளை கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஈசிஆர் பங்களாவுக்கு அழைத்து சென்று, காதலனுக்கு விருந்தாக்கினார்.. சஞ்சனா டீச்சர், காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், அதுபோலவே இப்போதும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடியில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை பார்க்கிறார் விஜயலட்சுமி.. இவரது கணவர் நரேஷ் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாயங்கால நேரங்களில் வீட்டிலேயே டியூஷன் எடுக்கிறார் விஜயலட்சுமி.. நர்சரி பள்ளியில் வேலை பார்ப்பதால், அந்த ஸ்கூல் உட்பட பல மாணவர்கள் விஜயலட்சுமியிடம் டியூஷன் படிக்க வருகிறார்கள். அப்படி 6 வயது சிறுமியும் இங்கு டியூஷன் படித்து வந்தாள்.. இந்த குழந்தையிடம் நரேஷ் தன் வேலையை காட்டி உள்ளார்.

15 நாளைக்கு முன்பு விஜயலட்சுமி வீட்டில் இல்லையாம்.. அந்த சமயத்தில்தான் 6 வயது குழந்தையை பெட்ரூமுக்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் குழந்தையை மிரட்டி அனுப்பி உள்ளார். அதனால் பயந்துபோன சிறுமியும் வெளியில் இதை சொல்லவில்லை.

அதேபோல கடந்தசில தினங்களுக்கு முன்பும் விஜயலட்சுமி இல்லாத நேரம் பார்த்து, நரேஷ் அதே குழந்தையை தூக்கி சென்று நாசம் செய்துள்ளார்.. இத்தனைக்கும் மற்ற மாணவர்கள் அங்குதான் படித்து கொண்டிருந்தனர்.. சிறிது நேரத்தில் அங்கு வந்த விஜயலட்சுமி, நடந்ததை ஓரளவு யூகித்து கொண்டு, குழந்தையை அழைத்து நடந்ததை பற்றி கேட்டிருக்கிறார்.

பிறகு மொத்தத்தையும் அழுதபடியே சொன்னாள் சிறுமி.. உடனே டீச்சர், கணவரை இழுத்து நாலு சாத்து சாத்துவார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று கெஞ்சியபடியே சத்தியம் வாங்கினாராம். இதற்கு பிறகு டியூஷன் முடிந்து அழுது வீங்கிய முகத்துடன் வந்த மகளை கண்டு பதறிபோய் தாய் என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார்.

விவரத்தை கேட்டு அதிர்ந்த தாய், விஜயலட்சுமியிடமே இதை பற்றி நேரிடையாக சென்று கேட்டிருக்கிறார்.. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முதலில் வாதம் செய்துள்ளார் விஜயலட்சுமி. போலீசுக்கு போக போகிறோம் என்று சிறுமியின் தாய் சொல்லவும்தான், "மன்னிச்சிடுங்க.. இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக்கறேன்" என்று கெஞ்சினாராம்.. ஆத்திரம் அடங்காத பெற்ற தாய் போலீசில் புகார் செய்வதை கண்டுதான் விஜயலட்சுமியும், நரேஷூம் தலைமறைவாகி.. அதற்கு பிறகு சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.