தமிழ் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

கனடாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் Toronto-வில் இருக்கும் York University-யில் முதுகலை பட்டம் படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த Rachel Albert(23) என்ற பெண், கடந்த புதன் கிழமை கேம்பஸ் அருகே Leitch Avenue and Assiniboine சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, உள்ளூர் நேரப்படி காலை சரியாக 10 மணிக்கு அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார்.

கண்மூடித்தனமாக கத்தியால் தாக்குதலுக்குள்ளான இவர், அங்கு இரத்த காயங்களோடு உயிருக்கு போராடியுள்ளார். அதன் பின் இது குறித்த தகவல் Toronto பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் Sunnybrook  மருத்துவமணையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சரமரியாக தாக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும், Rachel Albert தாக்கப்பட்டது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி அறிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபர் ஆசியாவை சேர்ந்தவர் எனவும், அவர் 5 அடிக்கு மேல் இருப்பார், கருப்பு ஜாக்கெட் போட்டிருந்ததாகவும் பொலிசார் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Rachel Albert தாக்கப்பட்டது குறித்து உடனடியாக தமிழகத்தில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் வெளியுறவு அமைச்சர் S Jaishankar-யிடம் உதவி கோரியுள்ளனர்.

அவர்கள் நாங்கள் உடனடியாக கனடா செல்வதற்காக வெளியுறவு அமைச்சர் உதவ வேண்டும். விசா கிடைப்பது அவ்வளவு எளிதானது கிடையாது, அமைச்சர் உதவினால் நாங்கள் விரைந்து சென்று Rachel Albert-ஐ பார்க்க முடியும் என்று அவருடைய சகோதரி உருக்கமாக உதவி கோரியுள்ளார்.

கனடாவில் தமிழக மாணவி மர்ம நபரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மாணவி மர்ம நபரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட விவகாரம் தெரியவந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், இந்திய மாணவி ராச்சல் ஆல்பெர்ட், ரொறன்ரோவில் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு உடனே விசா கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளிவிவகார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  மாணவியின் குடும்பத்தினர் உடனே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.