அதிவேகம்..! இளைஞனை மோதிய லொறி.. ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்..

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வேக கட்டுப்பாட்டை இழந்து லொறி மோதியதில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விபத்து சம்பவம், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் அருகில் ஏ9 வீதியில் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தினை ஏற்படுத்திய லொறி மற்றம் வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநாச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுளு்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசா்ர் மேற்கொண்டு வருகின்றனர்.