மரணத்தை உருவாக்கும் கொரோனா வைரஸ். விழிப்புணர்வு பதிவு. பகிருங்கள்.

கொரானா வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த வைரஸ், அமெரிக்கா, சவுதி போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 830 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அல்லாது வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மனிதர்கள் இதுவரை கண்டிராத இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.

இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.

சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

கொரானா வைரஸ் முதலில் சீன நகரமான வுஹானில் ஒரு மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது. இது முதலில் டிசம்பர் பிற்பகுதியில் வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஜலதோசம் ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே பரவுகிறது. இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது. எல்லோரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், சிறு குழந்தைகள் இந்த வைரஸின் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது? 

உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவுரை லிஸ்ட் வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளைப் பற்றி மக்களுக்கு அது, தெரிவிக்கிறது. விலங்குகளிடமிருந்து, குறிப்பிட்ட, இந்த, வைரஸ் தோன்றியதால், பாதுகாப்பற்ற வகையில் பராமரிக்கப்படும் விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்க்குமாறு WHO மக்களிடம் கேட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைச்சி பயன்படுத்துவோர், நன்கு சமைத்த இறைச்சி பொருட்களை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பயன்பட இந்த தகவலை பகிருங்கள்.