தனியார் பேருந்துடன் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (17.01.2020) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.