சிறுமியை சீரழித்து கொன்ற நபரை உயிருடன் கொளுத்திய கும்பல்!

ஆறு வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த ஒருவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.

ஆறு வயது சிறுமி ஒருவர் மெக்சிகோவில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில்   காணாமல் போயிருந்தார்.மறுநாள் குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியை கொலை செய்த நபரை அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுனர். பின்னர் குறித்த நபரின்  கைகளைக் கட்டி பெட்ரோல் ஊற்றி தீவைத்தது அந்த கும்பல்.

அலறி துடித்து சாகும் போது அங்கு வந்த பொலிசாரால் குறித்த நபரை  காப்பாற்ற முடியவில்லை.