யாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.

யாழ் கோவில் வீதியில் சென்பொஸ்கோ சந்திக்கு அருகில் ‘இராசம்மா‘ திருமண மண்டபம் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த விடுதி ஒன்று இன்று யாழ் பிரதேசசெயலக அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த மண்டபச் சூழலில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சோடிகளாக வந்து போவதாகவும், அப்பகுதிக்கு பழக்கமில்லா இளம் ஜோடிகள் அங்கு சென்று திரும்புவதாகவும் கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்தே அந்த மண்டபத்திற்குள் அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.

குறித்த மண்டப அறைக்குள் இருந்து ஒரு ஜோடி ஒன்டரை வயதுக் குழந்தையுடன் பிடிபட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு தாயான இளம் பெண்ணும் இன்னொரு ஆணும் பிடிபட்ட போதும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்றும் பிடிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 17 வயது எனவும் 5 மாதக் குழந்தையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒருவர் சாட்டியினை வசிப்பிடமாகவும் மற்றையவர் வெளி மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனினும் யாழ்ப்பாண பிரதேச செயலர் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த இராசம்மா திருமணம மண்டபத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாகவும் இங்கு குறித்த மண்டபத்தை பொறுப்பெடுத்த முகாமையாளராகச் செயற்படும் ஒருவரே இவ்வாறான கேவலத்தைப் புரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த விடுதியில் தங்கியிருந்த 17 வயதான சிறுமிக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. அந்த சிறுமியின் கணவர் என நடித்துக் கொண்டு அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒருவனும் பிடிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுமியைப் போல பலரை அந்த விடுதி முகாமையாளன் பாலியல் தேவைக்காக பலருக்கு கொடுத்து வந்துள்ளார் என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

close