தந்தையை கொன்ற 3 மகள்கள். மக்கள் ஆதரவு. காரணம் என்ன?

உறங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக தந்தையை கொலை செய்த 3 மகள்களுக்கு லட்சக்கணக்கிலான மக்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த கிரெஸ்டினா (19), ஏஞ்சலினா (18), மற்றும் மரியா கச்சதுரியன் (17) என்ற மூன்று சகோதரிகள் கடந்த 2018ம் ஆண்டு, நீண்ட காலமாக தங்களை பாலியல் வன்புணர்வு செய்து வந்த தந்தையை சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சகோதரிகளும், தற்காப்பிற்காகவே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 350,000 க்கும் அதிகமான பொதுமக்கள் மூன்று இளம்பெண்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் மூன்று சகோதரிகளின் மீது வழக்கு தொடுத்தவர், அதனை கைவிட முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் அவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள மாட்டார்கள் என சகோதரிகளின் வழக்கறிஞர் அலெக்ஸி பார்ஷி தெரிவித்துள்ளார்.