விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய், மகள்கள் உட்பட்ட 4 பேர் கைது!!

நாவலப்பிட்டி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாரும் மேலும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைக்குமாறும் நாவலபிட்டி நீதிமன்ற பதில் நீதவான் அமில பிரசாத் சுமனபால உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஐந்து சந்தேகநபர்களும் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலை படுத்தபட்ட போது உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி பகுதியில் தாய் மற்றும் 29, 24 வயதுடைய பெண்கள் மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (01) குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் நாவலப்பிட்டி குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் திருமணமனவர்கள் எனவும் இந்த இரண்டு பேரையும் கணவன் விட்டு பிரிந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி குற்றபுலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.