ஓடும் இரயிலில் இளம்பெண் கழிப்பறையில் வைத்து பலாத்காரம்

பிரித்தானியாவில் ஓடும் இரயிலில் மது போதையில் இருந்த பெண்ணை கழிப்பறையில் பலாத்காரம் செய்த கருணை இல்லத்தின் மேலாளருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Canterbury-ல் இருந்து Ramsgate-க்கு செல்லும் இரயிலில் கடந்த 2018ல் Timothy Davies (45) என்ற கருணை இல்லத்தின் மேலாளர் தனது மனைவியுடன் பயணித்தார்.

அப்போது மதுபோதையில் இருந்த பெண் கழிப்பறைக்குள் சென்ற போது அவர் பின்னாலேயே சென்ற Timothy கதவை பூட்டி கொண்டார்.

இதையடுத்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த அப்பெண்ணை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அந்த சமயத்தில் Timothyன் மனைவி கழிப்பறை அருகே வந்து கதவை தட்டினார்.

அப்போது மனைவியிடம் சிக்காமல் இருக்க, அப்பெண்ணுக்கு தான் உதவி வருவதாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கதவை திறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து விடயங்களையும் பொலிசில் கூறி புகார் அளித்தார்.

இதையடுத்து Timothy-ஐ பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இரயிலில் Timothy பாதிக்கப்பட்ட பெண்ணை பின் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் நீதிபதி முன்னால் ஒளிபரப்பட்டது.

ஆனால் தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும் அவர் விருப்பத்தோடு தான் உறவு கொண்டேன் எனவும் கூறினார்.

ஆனால் அவரின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் Timothy குற்றவாளி என தீர்ப்பளித்தது.

பின்னர் நீதிபதி கூறுகையில், கழிப்பறையில் நடந்த ஐந்து நிமிட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை பல இறக்கங்கள் மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இதற்கு காரணமான Timothy-க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.