யாழில் சிறுமியை காதலிப்பதாக கூறி துஸ்பிரயோகம் செய்த காவாலி!!
வலி தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி இளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து விடயத்தை வெளியில் சொன்னால் அந்தரங்கப் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவேன் என்றும் அவர் அச்சுறுத்திதயாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.
சிறுமி மேலதிக பரிசோதனைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.