யாழில் தூக்கில் தொங்கிய மாணவன். காதல் தோல்வியா காரணம்.

யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.

நேற்று மாலை மாணவன் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் (01) வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அறை ஒன்றில் தொலைபேசி வயர் மூலம் தூக்கில் தொங்கியுள்ளார்.

வெளியில் சென்ற அவரது தாயும், சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நேற்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வியாலேயே குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.