ரூம் போட்டு.. மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்!

கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்.. ஆக்ரா விமான போக்குவரத்து காலேஜில் படித்து வருகிறார்.. அதே காலேஜில் படிக்கும் 19 வயது மாணவி இவருக்கு அறிமுகமானார்.. இன்ஸ்டாகிராம் மூலம் ஃபிரண்ட்ஸ் ஆகி இருக்கிறார்கள்.. பிறகு செல்போன் நம்பர்களை பரிமாறி கொள்ள.. அது மேலும் நெருக்கத்தை தந்துவிட்டது.

கடந்த புதன்கிழமை அன்று 2 பேரும் ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர்.. 2 பேருமே தண்ணி அடித்துள்ளனர்.. ஓவராக குடித்ததில் அந்த பெண் போதையில் விழுந்துவிட்டார்.. மயங்கி கிடந்த பெண்ணை அந்த இளைஞர் மிக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..

பொழுது விடிந்து போதை தெளிந்து பார்த்தால் இளைஞனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து, போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போதுதான், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி கொடுமையான முறையில் இளைஞன் வன்கொடுமை செய்தது தெரியந்தது.

இதன்பிறகு போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அதில் அந்த இளைஞன் முகம் நன்றாக பதிந்திருந்தது.. அதனால் அவரை போலீசார் ஈசியாக கைது செய்து விட்டனர்.. இப்போது விசாரணையும் நடந்து வருகிறது.