please wait 3 seconds...

பயத்தில் சாமான்களை வாங்கி இப்ப குப்பையில் போடும் சனங்கள் !

கொரோனா பீதியால் உள்ள எல்லா சூப்பர் மார்கெட்டுக்கும் சென்ற பல லட்சம் மக்கள். அங்கே தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி வீட்டில் குவித்தார்கள். இதனால் பல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்த்தது. ஆனால் தற்போது தாம் வாங்கிய பொருட்கள் காலாவதியாக தொடங்க. அவை அனைத்தையும் அவர்கள் குப்பை தொட்டியில் போட்டு வருகிறார்கள். இதனால் லண்டன் முழுக்க உள்ள குப்பை தொட்டிகளில் பல உணவு பொருட்கள் இருப்பதாக அதனை சுத்தம் செய்யும் நபர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல நாட்கள் வைத்திருக்க கூடிய பொருட்களை வாங்கினால் கூட பரவாயில்லை. ஆனால் சிலர் பால் பாண் முட்டை என்று வெகு சீக்கிரத்தில் பழுதடையும் பொருட்களை கூட நிறைய வாங்கி வீட்டில் வைத்திருந்து. தற்போது அதனை குப்பை தொட்டியில் போட்டு வருகிறார்கள். தங்கள் சொந்தக் காசை வீணாக்கியது மட்டுமல்லாது. பிறருக்கும் பொருட்கள் கிடைக்கவிடமால் செய்துள்ளார்கள் இந்த நபர்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close