இன்று இரவு 8 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகிறது!

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (24) இரவு மீளவும் அமுலாகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று (24) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகிறது.

இந்த ஊரடங்கு மீளவும் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். நாளை (25), நாளை மறுநாள் (26) இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close