யாழில் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகிறதா கொரோனா? அவதானம் மக்களே...

சுவிஸ் போதகரால் யாழ்பாணத்தில் பரப்பப்பட்ட கொரோனாவால், இன்று யாழ் நாதியற்று தவிக்கிறது. இந்த பாதிரியாரின் கூட்டத்திற்கு சென்ற ஆட்களை பொலிசார் தெடித் திரிந்த வேளை. தமக்கு பிடிக்காத ஆட்களின் பெயர்களை எழுதி, இவரும் பாதிரியாரின் கூட்டத்திற்கு சென்றார் என்று பெட்டிஷன் கடிதம் போட்டதும் தமிழர்கள் தான். அவர்களை பொலிசார் பிடித்து பல மணி நேரம் விசாரித்து பின்னர் உண்மைகளை கண்டறிந்து விடுவித்தார்கள். இப்படி ஒரு ஈனத் தனமான காரியங்களை செய்ததும் அதே யாழ்பாணத்தான் தான்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னரே, சுவிஸ் பாதிரி யாழுக்கு அவசரமாக வந்தார். அவசரமாக திரும்பி சுவிசுக்கு ஓடினார். அவர் சுவிஸ் சென்ற மறு கணமே வைத்தியசாலை சென்று தனக்கு கொரோனா என்று கூறி அனுமதியாகினார். ஆனால் அவர் எப்படி தடுப்பு முகாம் செல்லாமல், கொழும்பில் இருந்து நேரடியாக யாழ் வந்தார் ? என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா. அது போக மீண்டும் அவர் அவசரமாக புறப்பட்டு சுவிஸ் சென்றுவிட்டார். இது இவ்வாறு இருக்க கடந்த 2 தினங்களுக்கு முன்னர், யாழுக்கு 8 பேர் தப்பி லொறியில் வந்தார்கள்.

இவர்கள் கொரோனா தாக்கிய பகுதிகளில் இருந்து யாழுக்கு லொறியில் வரும்வேளை ராணுவ சோதனை பிடியில் எப்படி சிக்கவில்லை ? என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா. இதில் முக்கியமாக சுவிஸ் போதகரின் யாழ் வருகை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த எட்டுப் பேர் என்ற தகவல்களோடு, தென் பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் என்ற பேரில் வட பகுதிக்கு அழைத்து வரப்பட்ட ஆயிரத்து இரு நூறு பேர் என்ற வகையில் பார்க்கும்போது, வட பகுதி மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்பதை மட்டும் சொல்லியாக வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.