தனிமைப்படுத்தும் நிலையமாக கோப்பாய் கல்வியற் கல்லூரி. தொடரும் பதற்றம்.

யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லுாரி சுற்றாடலில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தேசிய கல்வியியற் கல்லுாரியில் இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்கான நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கல்வியியற் கல்லுாரியில் மாணவர் விடுதி இராணுவத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இராணுவத்தினரின் இந்நடவடிக்கைக்கு கல்வியியற் கல்லுாரி சுற்றாடலில் உள்ள மக்கள் எதிர்ப்பு தொிவிக்ககூடும் என்பதால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close