செந்தூரனின் மரணம்: சினிமாவை மிஞ்சும் ஒரு கொலை.

தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி செயற்பாட்டாளரும் வலி கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமாகிய செந்தூரனின் மரணம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இவருக்கு கடைசியாக வந்த டெலிபோன் அழைப்பு பற்றி பொலிசார் எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறார்கள். இது போக அவர் ஏன் திடீரென புறப்பட்டு தொண்டமனாறு பக்கம் செல்ல வேண்டும். அங்கே ஆள் நடமாட்டம் அற்ற பகுதியான மயிலதனை பகுதி கடலில் அவர் உடல் இருந்தது ? அங்கே உள்ள நீர் ஆழமான நீர் அல்ல. அதுவும் தற்கொலை செய்யும் நோக்குடன் எவரும் அங்கே செல்ல மாட்டார்கள். ஏன் எனில் அது ஆழம் குறைந்த பகுதி.

அவர் குளிக்கச் சென்றிருந்தால் கூட, தனது  துவாய் முதல் கொண்டு மாற்று உடுப்புகளை கொண்டு சென்றிருப்பார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையும் அல்ல. இன் நிலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. செந்தூரனை திட்டமிட்டு குறித்த இடத்திற்கு வரவளைத்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம். Source- https://athirvu.in/34219/

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close