Trending News...

பலாலியில் உணவு வழங்கிய நபருக்கும் கொரோனா.

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  வடபகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 24 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் இன் நபர்களுக்கு உணவு வழங்கிய ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள VIBER ஊடாக இணைந்து கொள்ளுங்கள். Click Here