Trending News...

அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று! குழப்பத்தில் மருத்துவர்கள்

தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 415பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும், பரவி வருகிறது. இதன் அறிகுறிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக இந்த வைரஸ் தாக்கியிருந்தால், மூன்று வித்தில் கண்டறிய முடியும். அதாவது, முதல் அறிகுறி இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவையாகும்.

ஆனால், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவி வருகிறது. அதாவது ஏ என்ற நபருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று இருந்தால் அவர் பல இடங்களுக்கு பயணிப்பார். இவ்வாறு அவரிடம் இருந்து பலருக்கு எளிதில் பரவிவிடும்.

தமிழகத்திலும் கூட இப்படி நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் சில நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் எதிர்மறை முடிவுகளே வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. .

அதேபோல் சீனாவில் தற்போது மீண்டும் கொ ரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவில் தற்போது கொ ரோனா ஏற்படும் நபர்களில் பலருக்கு அறிகுறியே இல்லை. அதேபோல் இ த்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது. அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொ onரோனா ஏ ற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 50% பேர் கொ ரோனா அறிகுறியே இல்லாமல் பா திக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 571 பேருக்கு கொ ரோனா உள்ளது. இதில் 415 பேருக்கு கொரோனா அறிகுறியே தென்படவில்லை. இவர்கள் எல்லோரும் டெல்லி மாநாடு சென்றவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அறிகுறி ஏற்படும் முன்பே சோதனை செய்து அவர்களுக்கு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள். இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு உயிரி ழந்த ச ம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.