வடகொரியா அதிபர் இறந்துவிட்டாரா? வலைத்தளங்களில் பரவும் செய்தி.


வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது, இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.

அதே நேரம் வியாழக்கிழமை அன்று, ஊடகங்களுக்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் உன்னுடன் தனது நட்பு தொடர்ந்து வருவதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கிம் உடல்நலத்துடன் இருப்பதாக தான் நம்புவதாகவும் கூறினார். இந்நிலையில் இந்த புகைப்படம் பற்றி Jaffnabbc சார்பில், Reverse search engine மூலம் ஆய்வு செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் போலியானது என தெரியவந்தது. மேலும், இது கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்த போது, எடுத்த புகைப்படம் என்பதும் தெரியவந்தது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.