Trending News...

LOLC நிறுவனத்தின் தகாத செயல். இரு பெண்கள் தற்கொலை முயற்சி!!

கிரானில் அதிகரித்து வரும் LOLC நிறுவனத்தின் தகாத செயற்பாடுகளின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளினால் தற்கொலை முயற்சியில் வைத்தியசாலையில் இருபெண்கள் அனுமதி…

மேற்படி கிரான் பிரதேசத்தில் வைரவர் ஆலய வீதி, விஷ்ணு ஆலய வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, கடற்கரை வீதி ஆகிய பிரதேசத்தில் வாழும் பல குடும்பங்களை கடன் கட்டமாறு LOLC நிறுவனத்தின் பணியாளர்கள் தகாத வார்த்தைப் பிரயோகம்,

முறையற்ற நடத்தைகள், அவமானமான பேச்சுக்கள் என்பன இடம்பெறுவதுடன், வாழைச்சேனை நிறுவனத்தின் பணியாட்களின் கொடுமைக்கு மேலதிகமாக கொழும்பு காரியாலய பணப்பிசாசுகள் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.

மேலதிகமாக பல குடும்பப் பெண்களை மிரட்டுவதுடன், அதிகாலையில் குடும்பப்பெண்களின் வீட்டிற்கு வந்து பல மணித்தியாலங்கள் வீட்டு முற்றத்தில் தங்கியிருந்து மாலை வீடு திரும்பும் LOLC பணியாளர்களின் கன்னியமான நடத்தை மனதை வியக்க வைக்கிறது.

இதனால் குடும்ப பெண்கள் குளிக்க, சமைக்க, சாப்பிட முடியாது வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, அவமானப்பட்டு கண்ணீர் முகத்துடன் வீட்டில் உறையும் நிலைக்கு தமிழர்களின் பண்பாடுகளை மீறும் கீழ்த்தரமான நடத்தைகளை இவர்களின் செயற்பாடுகள் கிரான் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

வட்டி மற்றும் LOLCநிறுவன கடன் பிரச்சனையால் சமூர்த்திப்பணம், அரசாங்கத்தின் நலன்புரி உதவிப்பணத்தை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதையும், தற்கொலை முயற்சியை கருத்திற் கொண்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதுடன், பொதுமக்களின் உயிருக்கும், நிம்மதிக்கும் உத்தரவாதமளிக்கும் வகையில் LOLC நிறுவன பணியாளர்களது முறையற்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்க பணியாளர்களது கடமை என்பதை மறந்து விட்டீர்களா???
காத்திருக்கிறோம்!
பணிந்திருக்கிறோம்!
நிம்மதியை வேண்டுகிறோம்.

தகவல்
கிரான் பொதுமக்கள்