யாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.

வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வோரை கண்காணிக்க பொலிஸார் தங்கியிருக்கின்ற சுற்றுவளைவு ஒன்றினை மையப்படுத்தி உள்ளுர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றே வெடித்துள்ளது.

பொலிசாரை இலக்கு வைத்து மண்ணில் புதைத்த வெடிபொருளே வெடித்துள்ளது.

இதனிடையே சில தரப்புக்கள் கிளைமோர் குண்டு வெடிப்பென பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதாகவும் இது தொடர்;பில்; பொலிஸ் , இராணுவம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதே வேளை குறித்த குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் பல நுாறு ஏக்கர் வெற்றுக் காணி்யை ஊத்தை சேது என அழைக்கப்படும் நோர்வையைச் சேர்ந்த சேதுரூபன் என்பவன் வாங்கியுள்ளான் எனவும் அக் காணி உள்ள பகுதியை முக்கியத்துவம் படுத்தும் நோக்கில் அங்குள்ள சிலரைக் கொண்டு இவ்வாறான குண்டுத் தாக்குதல் திட்டத்தை மேற்கொண்டு பொலிசாரையும் இராணுவத்தையும் அப்பகுதியில் நிலை கொள்ளச் செய்து தனது காணிக்கு முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close