யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

யாழ்.பாண்டியன்தாழ்வு- சந்தனமாதா கோவிலுக்கு அருகில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களையும் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.