மீசாலை ரயில் நிலையம் அருகே இடம்பெற்ற கோரவிபத்து – மூவர் படுகாயம்

தென்மராட்சி – மீசாலை ரயில் நிலையம் அருகே இன்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close