பிரபாகரனிடம் தொண்டமான் கவலைப்பட்ட விடயம்: தலைவர் சொன்ன விளக்கம்

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலம் முதல், ஒரு குறைபாடு ஒன்று இருந்தது வந்தது. அது என்னவென்றால் இலங்கையில் நாங்கள் தமிழர் இல்லையா ? எங்களுக்கும் விடுதலை வேண்டாமா என்று மலையக மக்கள் கேட்டு வந்தார்கள். இதனால் விடுதலைப் புலிகள் தமீழ வரை படைத்தை வெளியிட்ட நாள் முதலாக, இதில் மலையக மக்களின் பகுதிகள் இணைக்கப்படவில்லை என்ற மன வேதனை பல மலையக மக்களுக்கு இருந்து வந்தது.

இதனை 2002க்கு முன்னர் தொண்டமான் அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை வன்னியில் சந்தித்தவேளை நேரடியாக கேட்டிருந்தார். இதற்கு தேசிய தலைவர் ஒரு நல்ல விளக்கத்தை கொடுத்திருந்தார். மலையக போராட்டம் என்று ஆரம்பித்தால், அது மலையக மக்களுக்கே பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று தலைவர் என்று விளக்கமாக கூறினார். அதில் அர்தமும் இருந்தது.  வட கிழக்கு பதிகள் போல அல்ல மலையகம். முழுக்க சிங்களவரால் சூழப்பட்ட ஒரு பகுதி.

உங்களையும் நாம் போராட்டத்தில் இணைத்தால், முதலில் அழியப்போவது நீங்களாக தான் இருப்பீர்கள். அதனை நான் விரும்பவில்லை. மலைய தமிழர்கள் முற்றாக அழியவும் வாய்புகள் உள்ளது என்று தலைவர் பிரபாகரன் தொண்டமானுக்கு கூறினார். இதனை பெருமனதோடு அவர் ஏறுக் கொண்டார். என்ற சம்பத்தை நேரில் பார்த்த தேசிய தலைவரின் முன் நாள் மெய் பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் மலையகத்தில் இருந்து வன்னி வந்து, விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடி வீரச்சாவை பலர் தழுவிக் கொண்டார்கள் என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. இன்று நாம் நல்லதொரு மலையக தலைவரை இழந்து இருக்கிறோம்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close