மிருசுவிலில் இடம்பெற்ற விபத்து. இருவர் பலி. காணொளி.

மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு மிருசுவில் – உசன் பகுதியில் இடம்பெற்றது.

பளை- இயக்கச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த மற்றொரு டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.