யாழில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
யாழ். வடமராட்சியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (19) மாலை பிஸ்டலால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் கல்முனையில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவுக் காரியாலயத்தில் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வடமராட்சி கரணவாய் மத்தியைச் சேர்ந்த 21 வயதுடைய கே. கமல்ராஜ் எனத் தெரியவருகின்றது.
குறித்த காரியாலயத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் தனிமையில் இருந்த நிலையிலேயே குறித்த அதிகாரி, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காதல் பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.