சற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது!!

யாழ் செயலகத்தின் முன் வாசலில் வைத்து சுற்றுச்சூழல் அதிகாரி ஒருவரின் கை சற்று முன் வாள் வெட்டுக்காவாலிகளால் வெட்டப்பட்டது. குறித்த காவாலிகள் அதிகாரியின் கையை வெட்டிவிட்டு அதிகாரியின் மோட்டார் சைக்கிளையும் அடித்துடைத்த பின்னர் ஓடித்தப்பிய போது அவர்களில் ஒருவனின் மணிபேர்ஸ் விழுந்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. இதனை வைத்து பொலிசார் வாள்வெட்டு நடாத்தியவர்களை தேடிப்பிடிக்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் செயலகத்தில் கொரோனா நிவாரணத்தை அதிகாரிகள் சிலரின் உதவியுடன் அரசியல்வாதி ஒருவர் கடத்தியதாக ஊடகங்களில் வெளியாகிய சம்பவத்தின் எதிரொலியாக இவ்வாள் வெட்டு இடம்பெற்றிருக்கலாம் என கச்சேரி வட்டாரங்கள் சந்தேகிக்கின்றார்கள்.ஊழல் புரிந்த அதிகாரிகள் சிலரே இந்த வாள்வெட்டின் பின்னணியில் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றார்கள்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.