கரும்பு தோட்டத்தில் கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி!

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் வன்கொடுமை செய்யப்ப்ட்டு கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி சம்பவத்தின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

குறித்த சம்பவம் லக்னோவில் இருந்து 130 கி.மீற்றர் தூரத்தில் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வயல்களில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி, கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் முதல் காணமல் போயிருந்தார். இதனால் அவரின் தந்தை உட்பட குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிய போது, கரும்பு தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்தார்.

அப்போது சிறுமியின் கண்கள் வெளியேற்றப்பட்டும், நாக்கு வெட்டப்பட்டும், துப்பட்டா மூலம் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததாக சிறுமியின் தந்தை கடும் வேதனையில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.

அதன் படி வெளியாகியுள்ள பிரேதபரிசோதனை அறிக்கையில், சிறுமியின் கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை.

கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன என்றும் இதற்கு கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் உத்திரப்பிரதேச பொலிசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வன்கொடுகை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது, கற்பழிப்பு, கொலை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.