உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

விமானம் தரையிறங்கிய போது நொறுங்கி விபத்து.. 18 பேர் பலி.. 123 பேர் காயம்.

கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி, துணை விமானி, குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர். 123 பேர் காயம் அடைந்துள்ளனர்

இந்த கோர விபத்தில் 123 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம் (1X -1344) துபாயில் இருந்து 184 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்பட 191 பேரை ஏற்றிக் கொண்டு கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு இன்று இரவு வந்தது. இந்த விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் விமானம் விபத்துக்குள்ளானபோது அதிலிருந்து தீ மற்றும் கரும்புகை வந்தது என்று தெரிவித்தனர். இந்த விமான விபத்ததில் விமானி , துணை விமானி உள்பட 16 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 123 பயணிகள் காயமடைந்துள்ளனர். 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் படி மத்திய அரசால் இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 4 விமான பணி பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் பெயர் விவரமும் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் வந்துள்ளனர்.

24 ஆம்புலன்ஸ்கள் கரிப்பூர் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளன. காயமடைந்தவர்களை அவை மீட்டு வருகின்றன. மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இரு மாவட்ட கலெக்டர்கள் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு முடுக்கிவிட்டனர். இறுதியாக விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் நிறைவடைந்தது.