தெல்லிப்பழையில் கோர விபத்து..! 3 இளைஞர்கள் படுகாயம்

விளான்-தெல்லிப்பளை வீதியில் இன்று இரவு (சற்று முன் 9 மணியளவில்) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளானதில்  மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதென சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.