இலங்கையில் தனது கள்ளக்காதலனை திருமணம் செய்யும்படி மகளை வற்புறுத்திய 46 வயது தாய்

தனது கள்ளக்காதலனை திருமணம் செய்யும்படி வற்புறுத்திய தாயாருக்கு எதிராக, யுவதியொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பலாங்கொட, ரசகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

3 பிள்ளைகளின் தாயாரான 46 வயதான பெண் மீதே குற்றம்சாட்டப்பட்டது. அவர், தனது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதியளித்து 18 வயதான இளைஞன் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். எட்டு ஆண்டுகள் அந்த வீட்டில் பணியாற்றிய இளைஞனிற்கு இப்பொழுது 26 வயது.

தமது விவசாய நடவடிக்கையில் இளைஞனை ஈடுபடுத்தினார். சம்பளமில்லாமல் விவசாய நிலத்தில் பணிபுரிந்த இளைஞன், எஜமானியின் 20- 25 வயதிற்கிடைப்பட்ட 3 மகள்களில் ஒருவரை திருமணம் செய்ய எதிர்பார்த்திருந்தார்.

சில காலத்தில் எஜமானிக்கும், இளைஞனிற்குமிடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. எஜமானியின் கணவரும் வயல் காவல் மற்றும் விவசாய நடவடிக்கைக்காக பகலில் வெளியில் சென்றுவிடும் சமயத்தில், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை அறிந்த மகள்கள் இருவர் அதிருப்தியடைந்து, அவர்களின் காதலர்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். 20 வயதான கடைசி மகள் மட்டுமே வீட்டில் எஞ்சியிருந்தார்.

கடைசி மகளை, அந்த இளைஞனுடன் சேர்ந்து இருக்குமாறு தாய் வற்புறுத்த ஆரம்பித்துள்ளா். இதற்கு மகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் அந்த யுவதி முறைப்பாடு பதிவு செய்தார். இதையறிந்த தாயார், முறைப்பாட்டை மீளப்பெற வலியுறுத்தி யுவதியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

பலாங்கொட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச இந்த விவகாரத்தில் தலையிட்டு, தாயாரையும் கணவரையும் விசாரணைக்கு அழைத்து, வாக்குமூலம் பதிவு செய்தார். அத்துடன், தாயாரை கடுமையாக எச்சரித்து, முறை தவறிய உறவை பேணுவதென்றால் வீட்டை விட்டு வெளியேற எச்சரித்தார்.

குறிப்பிட்ட இளைஞனிற்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.

8 ஆண்டுகள் சம்பளமில்லாமல் பணியாற்றியும், பலனில்லாத சோகத்தில் இளைஞன் மூழ்கியுள்ளார்.