உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

என் விருப்பு வாக்கில் மோசடி. பாலித தேவப்பெரும.

இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது விருப்பு வாக்கு எண்ணிக்கை லட்சத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும் எனினும் இம்முறை எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு அது குறைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், இம்முறை வெளியான தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதெனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். எனினும் சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.