பொலிசாரால் வாய் மூலமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட இலங்கை அழகி பரபரப்பு புகார்!!

பொலிசார் காரணமில்லாமல் தன்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்ததுடன், வாய்மொழி மூலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவம் சிங்கள மொடல் அழகியொருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மொடல் அழகியான மது குலதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நேரலை வீடியோவில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

அவர் வெளியிட்ட வீடியோவில்..

அவரும், கணவரும் சரியான காரணமின்றி இந்த வாரம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் முன்னிலையாகியிராத சந்தர்ப்பத்தில் என்னை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இது எனது உரிமையை மீறும் செயல்.

12 ஆம் திகதி காவல்துறையினர் எனது வீட்டிற்கு வந்தனர். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எனது வீட்டை சோதனையிட்டனர். பின்னர் அவர்கள் என் கணவருடன் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் காவல் நிலையத்தில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்தனர். நான் அத்துமீறப்பட்டதாக உணர்ந்தேன்.

அவர்கள் எதைத் தேடுகிறார்கள், ஏன் அவர்கள் வீட்டை சோதனையிட்டார்கள் என என்னிடம் ஒருபோதும் சொல்லவில்லை.

அவர்கள் என்னிடம் சொன்ன விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. என் கணவர் என்னுடன் இருந்தபோதும் அவர்கள் இதைச் செய்தார்கள். அவர் ஏதாவது சொன்னால் அவரை 14 நாட்களுக்கு உள்ளே வைப்பதாக அவர்கள் மிரட்டினர் என்றார்.