கதவை திறந்து வைத்து கட்டிலில் காயத்ரியின் வெறித்தனம்.. மிரண்டு போன மக்கள்.

கள்ளக்காதலனுக்காக கணவனை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற காயத்ரி பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது.. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாகர்கோவில் மக்கள் மீளவே இல்லை.

வெட்டூர்ணிமடம் அருகே கேவச திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்.. போட்டோகிராபரான இவருக்கு 31 வயசாகிறது.. மனைவி பெயர் காயத்ரி.. 4 வயசில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த வாரம் இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து இவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்..அவரது தலையில் கத்தியால் வெட்டினர்.. ஆணுறுப்பையும் நசுக்கி சேதப்படுத்தினர்.

உடனே காயத்ரி அலறி கூச்சல் போட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து திரண்டு வந்து கணேஷை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு மண்டை ஓடு பிளந்திருந்தது.. அதனால் உடனடியாக 3 நேரம் ஆபரேஷன் செய்யப்பட்டு, தற்போதும் ஐசிவியூவில்தான் கணேஷ் உள்ளார். முதலில் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று காயத்ரி சொன்னாலும், போலீசார் எதையுமே நம்பவில்லை.. குடும்பத்தினரும் காயத்ரி மீது சந்தேகத்தை வெளிப்படுத்தவும்தான் விசாரணை ஆரம்பமானது.

காயத்ரியின் கள்ளக்காதலன் பெயர் யாசின்.. கல்யாணத்தக்கு முன்பே இருந்த காதல் இது.. வீட்டில் யாருக்கும் யாசினை பிடிக்காததால் காயத்ரிக்கு கணேஷை கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.. இருந்தாலும் காயத்ரியை பிரிய மனசில்லாமல், அவர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பிளே ஸ்கூலை ஆரம்பிக்க நினைத்தார் யாசின்... அதற்காக கணேஷின் வீட்டு மனையை அடமானம் வைத்து காயத்ரி கள்ளக்காதலனுக்கு உதவினார்.. ஸ்கூல் ஆரம்பமானது.. காயத்திரியும் அதில் டீச்சரானார்.. கள்ளக்காதல் ஜோடி ஜாலியாக இருந்தனர்.

திடீரென கணவர் வீட்டு பத்திரம் விவகாரத்தை கிளப்பவும்தான் காயத்ரி, டென்ஷனாகிவிட்டார்.. அதனால் கணவனை கொல்ல, யாசினிடம் ஐடியா கேட்க, அவர் கூலிப்படையில் 2 பேரை ஏற்பாடு செய்து 2 லட்சம் பணம் பேசினர்.. சம்பவத்தன்று கணேஷ் தூங்கியதும் கள்ளக்காதலனுக்கு போன் செய்து, தகவலை சொன்னதுமே 2 பேர் கணேஷை கொல்ல வீட்டிற்கு வந்தனர்.. இதற்காக வாசற்கதவை திறந்து வைத்து காத்திருந்தார் காயத்ரி.. அவர்கள் உள்ளே நுழைந்து கணேஷை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

கணேஷ் அலறி துடிக்கும்வரை காயத்ரி அங்கேயே கட்டிலில்தான் படுத்து கொண்டிருந்திருக்கிறார்.. கணேஷ் சுருண்டு விழுந்ததுமே லைட் போட்டு பார்த்தார்.. அப்போதுதான் கணவன் சாகவில்லை என்பது தெரிந்து ஷாக் ஆகிவிட்டாராம்.. அதனால் உடனே கள்ளக்காதலனுக்கு போன் செய்து, இன்னும் சாகலையே, உயிர் இருக்கு என்று சொல்லி உள்ளார்.

அதற்கு பிறகும் உயிர் பிரிந்துவிடும் என்று விடிய விடிய பார்த்து கொண்டே இருந்தார் காயத்ரி.. ஆனால், ரத்த வெள்ளத்தில் கணேஷ் துடித்து கொண்டே இருக்கவும்தான் வேறு வழியில்லாமல், கட்டிலில் இருந்து கணவன் கீழே விழுந்துவிட்டதாக சொல்லி ஒப்பாரி வைத்து ஊரை கூப்பிட்டுள்ளார். கொலை செய்ய முயன்ற 2 பேர் கைதாகிவிட்டனர்.. ஆனால் அந்த கள்ளக்காதலனை இன்னும் தேடி வருகிறார்கள்.