கண்ணில் கண்டதையெல்லாம் திருடும் கும்பல் பருத்துறையில் கைது..!

யாழ்.வடமராட்சியில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வடமராட்சி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் குறித்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்,

நெல்லியடி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், சைக்கிள் 2. தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று. கதிரை 10. மின்விசிறி ஒன்று.

18 விலையுயர்ந்த போன்கள். ஐ பாட் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.