சந்தையில் விற்கப்படும் கலப்படமான மஞ்சள் தூள்! மக்களுக்கு எச்சரிக்கை!!

சந்தையில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளின் பெரும்பகுதியுடன் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு கலக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இது குறித்து நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் நடத்திய ஆய்வுகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மஞ்சளுக்கு தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில், மஞ்சள் நிறமிகள் மாவுடன் கலந்து பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட மஞ்சள் மாதிரிகள் சோதனைக்காக அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தையில் விற்பனைக்கு வரும் மஞ்சள் தூளில் 50 வீதம் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு கலந்திருப்பதாக அரசு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தூளின் தரம் குறித்த தனது விசாரணையை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளதுடன், கட்டுப்பாட்டு விலையை மீறி மஞ்சள் விற்கும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.