உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி!

கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் பாதுகாப்பு கடவையை உடைத்துக் கொண்டு ரயில் தண்டவாளத்திற்குள் நுழைந்த நிலையில் ரயில் மோதியதில் கன்டர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு, கல்குடா ரயில் கடவையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து ரயில்வே பாதுகாப்பு கடவையினையும் உடைத்துக் கொண்டு எதிரே வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் வயது (48) என்பர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.