யாழில் பலவந்தமாக வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண்.
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.