யாழில் சனசமூக நிலையத்தை தீயிட்டு கொழுத்திய காவாலிகள்.

யாழ்.இளவாலை- பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்திலுள்ள விநாயகர் சனசமூக நிலையம் இன்று இனந்தொியாத காடையர்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குறித்த சனசமூக நிலையம் நேற்று மாலை 2.30 மணியளவில் காடையர்களால் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது 75 மேற்பட்ட கதிரைகள் மின்சார இணைப்புக்கள் கூரைப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன60 வருட பழமை வாய்ந்த இந்த பொக்கிசம் எரிக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் விசனத்தை தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.