அடுத்த சில நாட்களில் தொடர் மின்வெட்டு.

இலங்கைக்கான மின்சார நுகர்வில் கணிசமான பங்கை ஈடு செய்யும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துள்ள நிலையில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 4 நாட்களிற்கு, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, பிரதேசரீதியாக சுழற்சிமுறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

கரவலபிட்டி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கடும் போராட்டத்தின் பின்னர் நேற்றிரவு மின் விநியோகம் சீரடைந்தது.

இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக 900 மெகாவாட் மின் தேவையை நிவர்த்தி செய்ய நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளது.இதனால் பகுதிநேர மின்வெட்டு அமுலாகும் நிலை ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே நெருக்கடிகளைத் தவிர்க்கும்பொருட்டு மின்சாரத்தைச் சிக்கனமாகப் பய்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.