நம்பவே முடியலயே சாக்‌ஷி.. கண்ணாடியில எடுத்த செல்ஃபி போட்டோவா இது..

மாடல் அழகானும் பிரபல நடிகையுமான சாக்‌ஷி மாலிக், தற்போது வெளியிட்டு இருக்கும் மிரர் செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை ‘அட’ போட வைத்திருக்கிறது.

இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் தோன்றியதன் மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி மாலிக்.

குளிக்கும் வீடியோ
நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமின்றி, கொட்டும் அருவில் பிகினி உடையில் குளிக்கும் காணொளிக்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் சாக்‌ஷி மாலிக். அழகு ராணி என்றும், சூப்பர் என்றும் செம ஹாட் என்றும் இவர் பதிவிடும் இதுபோன்ற ஒவ்வொரு புகைப்படத்திற்கும் காணொளிவுக்கும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ஒர்க்கவுட் ஃப்ரீக்
ஒர்க்கவுட் பிரியையான சாக்‌ஷி மாலிக், மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு உடற்பயிற்சி செய்யும் காணொளிக்களையும், நிழற்படத்தையும் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு, உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். பேசும் போது பேச வேண்டும், நடக்கும் போது நடக்க வேண்டும் என நடைபயிற்சி குறித்த ஆலோசனை இந்த புகைப்படத்துடன் அவர் வழங்கி உள்ளார்.

கண்ணாடியா அது
இந்நிலையில், தற்போது வழக்கம் போல் தான் செய்யும் ஒர்க்கவுட் முடிந்த பிறகு தனது அழகு எப்படி இருக்கிறது என்பதை செல்ஃபி எடுத்து பார்த்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எல்லாரும், இவர் செல்ஃபி எடுக்கும் போது, இன்னொருவர் பிடித்த புகைப்படம் என்பது போல் இருக்கும் இந்த புகைப்படம் இவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் தானாம். அந்த அளவுக்கு புதிய கண்ணாடியை மாட்டியுள்ளார் என்பதை தனது கேப்ஷனில் அவரே தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிழையல்ல
கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் போது, பல தத்துவங்களை தட்டி விடுவது இவரது ஸ்டைல். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்துடன் நீங்கள் தவறு செய்யலாம். ஆனால், நீங்கள் உங்கள் தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்ற முயற்சி செய்யுங்கள் என பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார்.