வரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ ?

மகிந்த தரப்பு தேர்தலில் அடைந்த பெரு வெற்றி ஒரு புறம் இருக்க, அவரது வாரிசுகள் பலரும் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பெரும் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இம்முறை நமால் ராஜபக்ஷவுக்கு, ஒரு அமைச்சு பதவி நிச்சயம் என்ற தகவல் கசிந்துள்ளது. அப்படியே நமால் ராஜபக்ஷவை மேலே உயர்த்தி, அடுத்த தலைவராக்கும் நடவடிக்கையை மெல்ல மெல்ல செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அண்ணா தம்பி.

சும்மா சொல்லக் கூடாது, இது அண்ணாவின் மகன். இது தம்பியின் மகன் என்று அவர்கள் வேறு பார்பதே இல்லை. அந்த அளவு அவர்களுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது. இங்கே தமிழர்களாகிய நாம் தான் பிரிந்து நிற்கிறோம் என்பது தான் உண்மை