முக கவசம் அணியாதவருக்கு விசித்திர தண்டனை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்தோனேசிய அரசு, மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதே போல் மக்கள் பொது இடங்களில் கூடும்போது கட்டாயமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதை மீறி தலைநகர் ஜகார்த்தாவில் முக கவசம் இன்றி வெளியில் நடமாடிய ஒருவரை மாதிரி சவப்பெட்டியில் கிடத்தி நூதன தண்டனை வழங்கி உள்ளது.