Trending News...

15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்!


மாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிடித்துள்ளனர். 

எனினும் , தாம் ஒன்றாக வாழப் போவதாக அவர்கள் அடம்பிடித்து வருகிறார்கள் . மாணவனுடன் பாலியல் உறவை பேணிய குற்றவியல் வழக்கை ஆசிரியை எதிர்கொள்கிறார் . ஒரு பிள்ளையின் தாயாரான 28 வயதான ஆசிரியை மாணவனை கொழும்பு , கண்டி , நுவரெலியா பகுதிகளிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார் . தனது பிரதேசத்தில் உள்ள சுமார் 8 பேருக்கு ஆசிரியை மேலதிக வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார் . 

கொரோனா தொற்று காரணமாக தமது பிள்ளைகளை வெளியிடங்களிற்கு அனுப்பாமல் குறிப்பிட்ட ஆசிரியையிடம் அந்த பகுதி பெற்றோர் அனுப்பியுள்ளனர் . குறிப்பிட்ட மாணவனையும் தொலைவிலுள்ள வகுப்பிற்கு அனுப்பாமல் , அயலிலுள்ள ஆசிரியையிடம் அனுப்பியுள்ளனர் . ஆரம்பத்தில் ஒரு பாடத்திற்கு மட்டுமே மாணவன் மேலதிக வகுப்பிற்கு சென்றுள்ளான் .

எனினும் , மேலதிக வகுப்பை பற்றி தினமும் மாணவன் வீட்டில் புகழ ஆரம்பிக்க , ஏனைய வகுப்புக்களிற்கும் அவரிடமே மாணவன் அனுப்பப்பட்டான் . 

இதையடுத்து , கணிசமான நேரத்தை மேலதிக வகுப்பிலேயே மாணவன் கழித்து வந்துள்ளான் . ஆசிரியையின் கணவர் தொலைதூர பகுதியில் பணிபுரிகிறார் . வீட்டில் சிறு குழந்தை , ஆசிரியையின் தாயார் ஆகியோரே இருந்தனர் . மேலதிக வகுப்பு நடக்கும் இடத்திற்கு அவர்கள் வருவதில்லையென்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது . 

மேலதிக வகுப்பில் பாட இடைவேளைகளில் ஆசிரியைக்கும் , மாணவனிற்கும் காதல் உறவு உருவாகியுள்ளது . இது நாளடைவில் உடல் உறவு வரை சென்றுள்ளது . மேலதிக வகுப்பிற்கு செல்ல மாணவன் காண்பித்த ஆர்வம் தமக்கு ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் , ' ஆசிரியர் நன்றாக கற்பிக்கிறார் ' என்று மாணவன் கூறுவதால் , அவருக்கு பாடங்களில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தான் நம்பியதாக , மாணவனின் தாய் குறிப்பிட்டுள்ளார் .


15 வயது சிறுவன் தனது ஆசிரியரால் சில காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு , இறுதியில் ஆசிரியர் சமூக காரணிகளைப் பொருட்படுத்தாமல் மாணவனுடன் வாழ விரும்புகிறார் . ' ஓடிப்போவோம் ' என்று மாணவனிடம் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் . மாணவன் அதற்கு சம்மதிக்க இருவரும் வீட்டை விட்டு வெளியேறியது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது . எதிர்காலத்தில் கொஞ்சம் பணம் தேவை , அதனால் மதிப்புமிக்க ஒன்றை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு ஆசிரியர் தெரிவித்துள்ளார் . 

இதையடுத்து , வீட்டிலிருந்து சில தங்க நகைகளை மாணவன் திருடியுள்ளார் . சம்பவம் நடந்த நாளில் , மேலதிக வகுப்பிற்கு வந்த மாணவனுடன் , முச்சக்கர வண்டியொன்றை வீட்டிற்கு வரவழைத்து அதில் தப்பிச் சென்றுள்ளனர் . அதற்கு முன்னதாக ஏனைய மாணவர்களை வீடுகளிற்கு அனுப்பியுள்ளார் . 15 வயது சிறுவனும் அவரது சகோதரியும் அன்றைய கல்வி வகுப்பிற்குச் சென்றிருந்தனர் . மகள் மட்டும் திரும்பி வந்தபோது , தாயார் வினவியுள்ளார் . அண்ணாவிற்கு இன்னும் வகுப்பு முடியவில்லை என பதிலளித்தார் . இதனால் தாய் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை . 

நேரமாக ஆக சந்தேகமடைந்த தாய் , மாணவனின் கைத்தொலைபேசியில் அழைப்பேற்படுத்தினார் . பதிலில்லை . பின்னர் ஆசிரியையை அழைத்தார் . அதற்கும் பதிலில்லை . இதையடுத்து , ஆசிரியையின் வீட்டிற்கு சென்றபோது , வயோதிப தாய் எதையும் அறிந்திருக்கவில்லை . 

இதையடுத்து , பொலிஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் முறையிட்டனர் . 6 நாட்கள் அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை . இதையடுத்து , வெலிகம பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மாணவனின் தொலைபேசி எண்ணின் சிக்னல் விபரங்களை தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்று , விசாரணை நடத்தும்போது , ( செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள் ) கொழும்பு , கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல இடங்களில் தொலைபேசி செயல்படுத்தப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது . தொலைபேசி சிக்னலின்படி நுவரெலியாவிலுள்ள ஒரு ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிசார் , ஆசிரியையும் , மாணவனையும் கைது செய்தனர் .

16 வயதிற்கும் குறைந்த மாணவன் என்பதால் , ஆசிரியை குற்றவியல் வழக்கை எதிர்கொள்கிறார் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , வீட்டிலிருந்து இருவரும் புறப்பட்டு கொழும்பிற்கு சென்று விடுதியொன்றில் சில நாட்கள் தங்கியிருந்ததும் , பின்னர் கண்டி மற்றும் நுவராரெலியாவிலுள்ள சிறிய ஹோட்டல்களிலும் தங்கியிருந்ததும் , அப்போது இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார் . பாலியல் செயல்பாடுகளுக்கு தூண்டுதலாக ஆசிரியர் வகுப்பின் போது மாணவர்களின் மொபைல் போனில் சில ஆபாச வீடியோக்களை தவறாமல் காண்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .